Tamil Language
Key Programmes
கணினி வழிக் கற்றல்
தொடக்க நிலை 6-ஆம் வகுப்பு மாணவர்கள் முக்கியமான தேர்வுகளை எதிர்கொண்டாலும் அவர்களின் தமிழ் பாடங்கள் சுவாரசியம் குன்றாமலே இருந்தன. மாணவர்கள் தம் படைப்புகளை சய மதிப்பீடு செய்ய Padlet என்னும் கணினி வழி பயிலும் முறையை பயன்படுத்தினர். இதன் வழி, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் கருத்துக்களை உடனுக்குடன் அறிய முடிந்தது.
தொடக்க நிலை ஒன்றாம் மற்றும் இரண்டாம்
வகுப்பின் தமிழ் மொழி கற்றல்
தமிழ் மொழியை வாழும் மொழியாக பயன்படுத்தவும். அம்மொழியை மாணவர்கள் செவ்வனே கற்கவும் பல நடவடிக்கைகளைக் கொண்ட ‘தேன் தமிழ்’ எனப்படும் கற்றல் கருவி பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் எழுத்துக்கள் தொடக்கநிலை ஒன்று மற்றும் இரண்டில் வாசிப்பு,மொழிப்பயிற்சி, பாடல்கள், கதைகள், சொல் அட்டைகள் மற்றும் கையெழுத்து என பல முறைகளிலும் நடவடிக்கைகளிளும் கற்கப்படும்.
மாணவர்கள உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தமிழ் மொழியை கற்க எங்கள் பள்ளியில் கற்றலும் கற்பித்தலும் இன்றியமையாதவை. இதில் கணினி வழி கற்றலுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
மாணமவர்களின் திறன் படைப்பு
‘கொவிட் 19’ நோயால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் எங்கள் பள்ளியில் zoom வழி மாணவர்கள் ‘கொரொனா’ நோயை விரட்ட தமக்குத் தோன்றிய கருத்துக்களை படைத்தனர். ஆடல், பாடல்,கவிதைகள்,மற்றும் யோகாசனங்கள் போன்றவற்றின் வழி தம் திறமைகளை வெளிகாட்டினர். மாணவர்களின் ஆக்கப்பூர்வமான படைப்புகளைக் கண்ட அனைவரின் மனமும் புத்துயிர் பெற்றது என்பதில் துளியும் ஐய்யமில்லை.
விளையாட்டு வழி செய்யுள் கற்றல்
நீண்ட வரிகளைக்கோண்ட செய்யுள்களை மாணவர்கள் சலைக்காமல் கற்க மற்றும் மனனம் செய்ய விளையாட்டுகள் உதவியாக உள்ளன. விளையாட்டுகள் என்றாலே மாணவர்கள் மிக உற்சாகத்தோடு செயல்படுவர். குழுக்களில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பழமொழிகள் , ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற செய்யுள்கள் மாணவர்களின் மனதில் பசுமரத்தானி போல் பதிகின்றன.
####
####
####
####
####
####
####
####
####
####
####
####
####
####
####
தாய்மொழி முகாம்
தாய்மொழி மற்றும் கலாச்சாரத்தின் கற்றலை மேம்படுத்தும் கல்வி அமைச்சின் முயற்சிகளில் ஒன்று இவ்வாண்டு தவணை மூன்றில் நடைபெற்ற தாய்மொழி முகாமாகும். தாய் மொழியைச் செவ்வனே பயன்படுத்தும் கலாசாரத்தை ஆழ்ந்து அறியும் நோக்கில் பல சுவாரசியமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. குறிப்பிடத்தக்கவை சின்னம் வரைதல், நேயர் விருப்பம், இணையம் வழி கலைகள் கற்றல், பாரம்பரிய உணவு தயாரித்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுதல் போன்றவை ஆகும். இந்த நடவடிக்கைகளில் மாணவர்கள் களிப்புற்று பயன் அடைந்தனர் என்பது திண்ணம்.